இந்தப் பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை ஆராயும் போது ருஹுனு, மாயா, பிஹிடி என நாடு பிரிந்திருந்த காலத்தில் ருஹுனு இராசதானியின் அபிவிருத்தியடைந்த பிரதேசமாகவும், பிரதேச பிரபுக்கள்,அரசர்கள் வாழ்ந்த பிரதேசமாகவும் இருந்தமைக்கான சான்றுகளாக பெலிஅத்த பிரதேச சபை அதிகாரத்திற்கு உட்பட்ட கிராமங்களான மாளிகாதென்ன, உடுகல்மொடே, பல்லத்தர, பெலிகல்ல, சிடினமளுவ, வடரக்கொட, கெடமான்ன, கலகம போன்ற பிரதேசங்களில் இன்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன.
வில்வம் மரம் ஒன்றையும், வில்வம் பழம் விற்பனை செய்த மூதாட்டி ஒருவரையும் மையமாக வைத்து பெலிஅத்த என்ற பெயர் உருவானதாக புராணக் கதைகளில் சொல்லப்பட்டுள்ளது. ருஹுணு இராசதானி இருந்த காலத்தில் பிரதேச அரசனான மணிகிருள மன்னனின் மாளிகை மாளிகாதென்ன பிறதேசத்தில் காணப்பட்டதாகவும், குளிப்பதற்காக வந்த பின்னர் ஓய்வுஎடுப்பதற்காக தங்கிய இடம் ஹிடினாமளுவ என்று அழைக்கப்பட்டு பின்னர் சிடினமளுவ என்று திரிபடைந்ததாகவும், அரசர் ஒரு வகை பல்லக்கில் பயணிக்கும் போது எதிர்ப்பட்ட ஆற்றினை கடக்க, பல்லக்கை வைத்து விட்டு கடந்த இடம் பல்லன்தர என்ற பெயரில் அழைக்கப்படவதாகவும் கர் பரம்பரைக் கதைகள் வழியாக சொல்லப்படுகிறது.
அவ்வாறே பெலிஅத்த நகரை அண்மித்துக் காணப்படும் ளுணுகடே ஹந்திய என்ற இடம் அன்றைய காலத்தில் வண்டில்களில் வந்த உப்பு வியாபாரிகள் உப்பு விற்பனை செய்த இடமாக சொல்லப்படுகிறது. அவ்வாறே அதற்கு அருகில் உள்ள சிறு குன்றுடன் கூடிய வனப் பகுதியில் புலி போன்ற மிருகங்கள் வாழ்ந்ததன் காரணமாக பிற்காலத்தில் இப்பகுதி கொ(ட்)டிகொடெல்ல கந்த என்ற பெயரில் அரியப்பட்டதுடன், தற்போது அப்பகுதி கொ(ட்)டுகொடெல்ல என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக பெலிஅத்த பிரதேசத்திற்கு அண்மையில் உள்ள கஹவத்த பகுதியில் அக்காலப் பகுதியில் காவியுடை தரித்த பிக்குகள் ஆயிரக் கணக்கில் வசித்து வந்த தோட்டம் என்பதுடன், அந்த பிக்குகளுக்கு தானம் வழங்கிய பகுதி தங்முல்ல என்றும், அதுவே பிற்காலத்தில் தம்முல்ல என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது.
கண்டி யுகத்தில் இரண்டாம் இராஜசிங்ஹ மன்னனின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த மதிமிக்க பிக்கு ஒருவரான சிடினமளுவே தம்மஜோதி தேரருக்கும் அரசனுக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்பட்டதாகவும், நீல கொபே தூது எழுதிய பரண கணிதவியலாளர் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளை ஆராய்ந்து பார்க்கும் போது அதற்கான ஆதரங்கள் சாட்சியாக கிடைக்கின்றன. கண்டி யுகத்தில் காணப்பட்ட “சங்கராஜ வதகொத” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முல்கிரிகல விகாரையில் இருந்த வேஹெல்ல தலைமை பிக்குவும், உடுகல்மொ(ட்)டே கல்கெம விகாரையில் இருந்த வடரக்கொட தம்மபால தலைமைப் பிக்குவும், சிடினமளுவ புராதன விகாரையில் இருந்த சிடினமளுவ தம்மஜோதி பிக்குவும் பெளத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்தி புதிதாக விகாரைகள் அமைத்து அதனைச் சூழ கிராமங்களையும் அமைத்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏகாதிபத்தியவாதிகளால் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு பிரதேசமும் பற்றுக்களாக பிரிக்கப்பட்டத்துடன், இன்று பெலிஅத்த பிரதேச சபை அதிகாரப் பிரதேசமாக கருதப்படுவம் இப்பிரதேசம் அன்று மேற்கு கிறுவாபற்று என அழைக்கப்பட்டுள்ளது.